உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்

சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நிர்வாக கட்டிடம் திறப்பு விழா

சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நிர்வாக கட்டிட திறப்பு விழா இன்று (14) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி கெளரவ டி.கருணாகரன் தலைமையில் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி கெளரவ ஜே. ட்ரொட்ஸ்கி கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

மேலும் இந் நிகழ்வுக்கு கெளரவ அதிதிகளாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் பொறியியலாளர் எஸ். ஏ. கே.சுபசிங்க, நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் பணிப்பாளர் (பொறியியல் பிரிவு)
பொறியியலாளர் பி.எஸ்.சி.கே முணசிங்க,சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா,நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் பிரதம பொறியியலாளர் டீ.சஞ்ஞீவன்
மற்றும் விசேட அதிதிகளாக கல்முனை மேல் நீதிமன்ற பதிவாளர் எஸ்.எச்.எஸ் ஹக்கீமுள்ளாஹ், கல்முனை மேல் நீதிமன்ற வலயக் கணக்காளர்
ஏ.எல் நஜிமுடீன் மேல் நீதிமன்ற தொழிநுட்ப உத்தியோகத்தர்
எம்.எஸ்.எம் றிப்கான் மற்றும் சட்டத்தரணிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

-சர்ஜுன் லாபீர்

Related posts

இம்முறை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ரமழான் மாத இரவுத் தொழுகைக்கு அனுமதி [VIDEO]

ஜனாதிபதி அநுரவிற்கு உலக வங்கி வாழ்த்து – பொருளாதார முன்னேற்றத்துக்கு தொடர்ந்து ஆதரவு

editor

வெளிநாட்டினரை திருமணம் செய்வதற்கான சுற்றறிக்கையில் திருத்தம்