உள்நாடு

சம்மாந்துறையில் ஆயுதங்கள் மீட்பு!

(UTV | கொழும்பு) –

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறீ பத்ரகாளி அம்மன் கோவிலுக்கு சொந்தமான காணி ஒன்றில் உள்ள கிணற்றினை சுத்திகரித்த போது ரி 56 ரக துப்பாக்கி ரவை கூடு இரண்டு, 261 தோட்டாக்கள், LMG துப்பாக்கி தோட்டாக்கள் 57, 0.22 துப்பாக்கிக்குரிய வெற்று தோட்டாக்கள் 46 அதற்குரிய தோட்டாக்கள் 3,எம் 16 துப்பாக்கிகுரிய தோட்டாக்கள் 11,சுடர் துப்பாக்கி (Flare Gun) ஒன்று என்பன கிணற்றினுள் இருந்து மீட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்..

கோவில் பராமரிப்பாளர் சம்மாந்துறை பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமைய குறித்த பொருட்களை சம்மாந்துறை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த ஆயுதங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜனவரி முதல் வாகனங்களை இறக்குமதி!

சுற்றுலாப் பயணிகளுக்கான இலவச விசா நடைமுறை நீடிப்பு

CID அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்து ஒரு கோடி ரூபாய் இலஞ்சமாக பெற்ற 4 பேர் கைது!