உள்நாடு

சம்பிக்க ரணவக்க – நீதிமன்ற அழைப்பாணையில் மாற்றம்

(UTV | கொழும்பு) – கவனயீனமாக வாகனம் செலுத்தி விபத்தினை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் குற்றமிழைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவை இம்மாதம் 28 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இன்று(19) உத்தரவிட்டார்.

நாளைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், சீராய்வு மனுவொன்றை தாக்கல் செய்து இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையான பிரதிவாதியான பாட்டளி சம்பிக்க ரணவக்க, நாளை(20) பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளவுள்ளதால் மாற்று தினம் ஒன்றை பெற்றுத் தருமாறு தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றிற்கு அறிவித்தார்.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட பிரதிவாதிகள் மூவருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி அவர்களை நாளைய தினம்(20) நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவித்து இதற்கு முன்னர் அழைப்பாணை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசினை சாராத சுயாதீன உறுப்பினர்களின் புதிய தீர்மானம்

கட்சி செயலாளர்கள் – தேர்தல் ஆணைக்குழுவுக்கு இடையில் விசேட சந்திப்பு

அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு அழைப்பு