விளையாட்டு

சமிந்த வாஸ் மீண்டும் வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக

(UTV | கொழும்பு) – இலங்கை அணியில் வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக சமிந்த வாஸை மீண்டும் நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகள் சமிந்த வாஸுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையையடுத்து குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான இறுதித் தீர்மானத்தை நாளை எடுக்கவுள்ளதாகவும், அதன் பின்னரே வாஸின் ஒப்பந்த ஆவணங்கள் தயாரிக்கப்படும் என்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமாவதற்கு ஒரு சில மணித்தியாலங்களுக்கு முன்னதாக, வேகப்பந்து பந்து பயிற்றுவிப்பாளர் சமிந்த வாஸ் தனது பதவியிலிருந்து விலகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இங்கிலாந்துடனான போட்டியின் போது இலங்கை வீரர் பெதுமின் தலையில் பந்து தாக்கியது

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் குசல் விளையாடுவது சந்தேகம்?

ஐ.சி.சியின் புதிய அதிரடி விதிமுறைகள் விரைவில்