உள்நாடு

சமன் ரத்னப்பிரியவுக்கு ஜனாதிபதியினால் புதிய நியமனம்

(UTV | கொழும்பு) – தொழிற்சங்க செயற்பாட்டாளராக இருந்த சமன் ரத்னப்பிரிய ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 41(1) சரத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க இந்த நியமனத்தை வழங்கியுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சமன் ரத்னப்பிரிய தற்போது அரசாங்க தாதியர் சங்கத்தின் தலைவராக இருப்பதுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினராகவும் பல மாதங்களாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு கீழே,

No description available.

Related posts

சில பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு

மைத்திரி கட்சியின் புதிய கூட்டணி!

நாட்டில் இன்றும் திட்டமிட்டபடி மின்வெட்டு