உள்நாடு

சபாநாயகரால் சிறைச்சாலைகள் ஆணையாளாருக்கு பணிப்புரை

 (UTV | கொழும்பு) – எதிர்வரும் செப்டெம்பர் 8ஆம் திகதி பாராளுமன்ற அமர்வின் போது கொலை குற்றத்திற்காக சிறையில் வைக்கப்பட்டுள்ள இரத்தினபுரி பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்லால் ஜெயசேகரவை பங்கேற்க செய்ய வேண்டும் என சிறைச்சாலைகள் ஆணையாளாருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நேற்று(28) பாராளுமன்றத்தில் இதனை அறிவித்தார்.

அவர் தமது மரண தண்டனை தீர்ப்பை ஆட்சேபித்து மேன்முறையீடு செய்துள்ளநிலையில் அவரை நாடாளுமன்றத்துக்கு இன்னும் அழைத்துவரப்படாமை குறித்து சபையில் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டமை தொடர்பில் தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் பிரேமலால் ஜெயசேகரவை பாராளுமன்ற அமர்வுக்கு அனுமதிக்காமையானது, அவருக்கு விருப்புத் தெரிவு வாக்களித்த வாக்காளர்களின் உரிமைகளை மீறும் செயலாகும் என்ற அடிப்படையில் அவர் பாராளுமன்ற அமர்வில் பங்கேற்க முடியும் எனவும் தெரிவித்தார்.

Related posts

ஐயாயிரம் ரூபா மேன்முறையீடுகள் குறித்து பரிசீலனை

பாதுகாப்பு செயலாளர் இன்று யாழ். விஐயம்

நாட்டின் சில இடங்களில் 150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி