சம்மாந்துறை பொலிஸார் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட தேக்கமரப் பலகைகளையும், அவற்றை ஏற்றி வந்த வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகைதீன் மாவத்தை பகுதியில் நேற்று முன்தினம் (13) வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
அனுமதிப்பத்திரம் இல்லாமல் சட்டவிரோதமாக வாகனம் ஒன்றில் கொண்டு வரப்பட்ட ஒரு தொகை தேக்கமரப் பலகைகளை சம்மாந்துறை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குறித்த தேக்கமரப் பலகைகளை கடத்துவதற்கு பயன்படுத்திய வாகனத்தையும் சம்மாந்துறை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய சம்மாந்துறை 03 பகுதியைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்மாந்துறை பொலிஸ் பெருங் குற்றப்பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்மாந்துறை பொலிஸாரின் இந்த நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசாரின் பணிப்புரைக்கமைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலதின் அறிவுறுத்தலுக்கமைய பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கரின் வழிகாட்டலில், உப பொலிஸ் பரிசோதகர் ஏ.நசார் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்நடவடிக்கையை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்
-சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்