சூடான செய்திகள் 1

சட்டவிரோத சுவரொட்டிகள், பதாகைகளை நீக்க 1,045 பணியாளர்கள்

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய சட்டவிரோத சுவரொட்டிகள், பதாகைகளை நீக்கும் நடவடிக்கைகளுக்காக பொலிஸ் நிலையங்களில் 1,045 பணியாளர்களை இணைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சட்டவிரோத சுவரொட்டிகள், பதாகைகளை காட்சிப்படுத்துவோரை கைது செய்து வழக்குத் தாக்கல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத பதாதைகள், சுவரொட்டிகள் உள்ளிட்டவற்றை நீக்குவதற்காக சுமார் 46 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கிராம சேவகர்கள் சங்கம் தொழிற்சங்க போராட்டம்

நேவி சம்பத்தின் எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில்

தேங்காய் இறக்குமதி தொடர்பில் வெளியான புதிய தகவல்

editor