வகைப்படுத்தப்படாத

சட்டவிரோதமாக சவுதி அரேபியாவில் தங்கியிருந்த 2 ஆயிரம் பேர் தஞ்சம்

(UDHAYAM, COLOMBO) – சட்டவிரோதமாக சவுதி அரேபியாவில் தங்கியிருந்த 2 ஆயிரம் பேர் சவுதியில் உள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சம் புகுந்துள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களை பொதுமன்னிப்பு அடிப்படையில் தண்டனை இன்றி வெளியேற மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டது.

இதன்படி, தஞ்சம் புகுந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

இவ்வாறு தஞ்சமடைந்தவர்களில் அறுபது சதவீதமானவர்கள் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொது மன்னிப்பு காலம் கடந்த மார்ச் 29 ஆம் திகதியில் இருந்து 90 நாட்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

Change of portfolios of two Ministries

நாளை முதல் மழை குறைவடையலாம்

இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்…