உள்நாடுவணிகம்

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 300 வாகனங்கள்

(UTV | கொழும்பு) – சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 300 க்கும் மேற்பட்ட வாகனங்கள் சுங்க திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களின் பின்னர் இந்த வாகனங்கள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

வரி விலக்கு அளிக்கப்பட்ட அரசு ஊழியர்களின் வாகனங்களும் இந்த எண்ணிக்கையில் அடங்கியுள்ளதாகவும் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கட்டுப்பாடுகளை மீறி இறக்குமதி செய்யப்பட்டுள்ள குறித்த மோட்டார் வாகனங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாகவும் சுங்க திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

கொழும்பில், 2500 வீடுகளுக்கு நிதி ஒதுக்கீடு

பேர வாவியில் பறவைகள் உயிரிழப்பு – காரணம் வௌியானது

editor

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு