சூடான செய்திகள் 1

சஜித் உள்ளிட்ட ஐ.தே. க 55 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம்; ரணிலின் முடிவு என்ன?

(UTVNEWS|COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் 55 பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கை தொடர்பில் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் நாளை கலந்துரையாடுவதாக பிரதமர் உறுதியளித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்வதற்காக 7 நாட்களுக்குள் பாராளுமன்ற மற்றும் செயற்குழு கூட்டங்களை ஒரே நேரத்தில் நடத்துமாறு கோரி 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் நேற்று பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

இது தொடர்பில் நாளைய தினம் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதாக பிரதமர் கூறினார் என நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சி விஷேட நாடாளுமன்ற குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும் நேற்றுவரை ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பி எவ்வித கருத்து இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்துமபண்டார

லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டது

விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் உயிரிழப்பு