உள்நாடு

சஜித்தின் எதிர்த்தரப்பு கூட்டணிக்கு அஞ்சி தேர்தலை பிற்போட அரசாங்கம் முயற்சி – ஹரின் பெர்ணான்டோ [VIDEO]

(UTV|கொழும்பு) – தேர்தலை பிற்போட அரசாங்கம் முயற்சிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ குற்றம் சுமத்தியுள்ளார்.

அதிகரித்திருக்கும் பொருளாதார பிரச்சினையினால் நாட்டுமக்கள் மத்தியில் தோன்றியிருக்கும் அதிருப்தியை கருத்தில் கொண்டும் சஜித் பிரேமதாச தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பலம் பொருந்திய எதிர்த்தரப்பு கூட்டணிக்கு அஞ்சியும் பொதுத்தேர்தலை பிற்போடுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதனை அறியமுடிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

தேர்தலை காலம் கடத்திவிட்டு இராணுவ ரீதியான ஆட்சிமுறைமையை முன்னெடுத்து விட்டு பின்னராக தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகளும் இடம்பெறுதவதாக அரசாங்க உயர் மட்ட தகவல்களின் ஊடாக அறிந்து கொள்க்கூடியதாகவிருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Related posts

தேசிய மட்ட சிறந்த பெண் தொழில் முனைவோர் விருது பெற்றார் பிஸ்ரியா

மின்வெட்டு அமுலாகாது

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 739 பேர் கைது