சூடான செய்திகள் 1

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பக் காலம் இன்றுடன் நிறைவு

(UTV|COLOMBO) கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவுக்கு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

மேற்படி ஆகஸ்ட் மாதம் நடைபெறும் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் கால அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

உயர்தர பரீட்சை ஆகஸ்ட் ஐந்தாம் திகதி முதல் 31ம் திகதி வரை இடம்பெறும். தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 4ம் திகதி நடைபெறும் என்றம் குறிப்பிட்டார்.

 

 

Related posts

செயற்கையாக மழை பெய்ய வைக்க திட்டம்

UPDATE- வசந்த கரன்னாகொட CID இல் ஆஜரானார்

பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக சாட்சியம் வழங்க ஜனாதிபதி மைத்திரி இணக்கம்