சூடான செய்திகள் 1

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் தேசிய அடையாள அட்டைக்கான கால எல்லை

(UTV|COLOMBO) க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் தேசிய அடையாள அட்டை விண்ணப்பப்படிவங்கள் ஒப்படைக்கப்படும் இறுதித் திகதி எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆகும் என்று, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

மேற்படி தேசிய அடையாள அட்டைகளுக்கான விண்ணப்ப படிவங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை கடந்த 24ம் திகதியுடன் நிறைவடைய இருந்தாலும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் நன்மை கருதி, இந்த காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான பாடசாலை பரீட்சார்த்திகளின் விண்ணப்பப்படிவங்கள் ஏற்கனவே கிடைக்கப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

Related posts

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் அமைச்சர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கலந்துரையாடல்

வெளிநாடுகளுக்குச்சென்று பணிபுரிவோரின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்

நாணய சுழற்சியில் இலங்கை அணிக்கு வெற்றி