சூடான செய்திகள் 1

க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகள் டிசம்பர் மாதத்தில்

(UTV|COLOMBO)-கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய பரீட்சைகளை டிசம்பர் மாதத்தில் நடத்துவதற்கு கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இதனால் மாணவர்கள் கால தாமதம் இன்றி உயர் தரக் கல்விக் கல்வியை தொடர முடியும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பின்னர் உயர் கல்வியை தொடர்வதற்காக நீண்டகாலம் காத்திருக்க வேண்டியுள்ளது. உயர் தரப் பரீட்சையின் பின்னர் பல்கலைக்கழத்தில் அனுமதி பெறுவதற்கு அதிக காலம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால், மாணவர்களின் முக்கியமான காலம் வீண் விரயமாவதாக அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக மூடப்படும் பாடசாலைகளின் எண்ணிக்கையை இயலுமான வரை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஜனநாயகத்தைப் பாதுகாக்க கட்சி பேதமின்றி செயற்பட வேண்டும்

ஆகஸ்ட் மாதம் பிரதி அமைச்சர் குறித்து இறுதி தீர்மானம்

சமன் திஸாநாயக்க உள்ளிட்ட சந்தேகநபர்கள் நால்வரதும் விளக்கமறியல் நீடிப்பு