சூடான செய்திகள் 1

கோரிக்கைக்காக போராடத் தயார் – தாய் நாட்டுக்கான இராணுவ அமைப்பு

(UTVNEWS | COLOMBO) – தமது கோரிக்கையினை பெற்றுக் கொள்ள நடுவீதியில் இருந்து போராடத் தயார் என தாய் நாட்டுக்கான இராணுவ அமைப்பு தெரிவித்துள்ளது.

அதன் பிரதான ஒருங்கிணைப்பாளரான டீ.வசந்த தெரிவிக்கையில், “ஜனாதிபதி 2019 சுதந்திர தின மேடையில் தெரிவிககியில் 30 வருட யுத்தத்தில் காயமடைந்து அங்கவீனமான பொலிசார் மற்றும் இராணுவ வீரர்கள் இறந்த இராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு சம்பளம் வழங்குவதாக தெரிவித்திருந்தார். அவற்றுக்கான நடவடிக்கைகளை இரண்டு மாதங்களுள் நிறைவேற்றுவதாக தெரிவித்திருந்தார். எமது முதல் கோரிக்கை அது தான்..” எனத் தெரிவித்திருந்தார்.

தாய் நாட்டுக்கான இராணுவ அமைப்பு உள்ளிட்ட இராணுவ அமைப்புக்கள் நேற்று(11) இந்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஊழல்வாதிகளுக்கு தமது ஆட்சியில் பதவிகள் வழங்கப்பட மாட்டாது – சஜித்

இலஞ்சம் வழங்க முற்பட்ட நபரின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை தொடரும் மண் சரிவு அபாயம்