அரசியல்உள்நாடு

கோப் குழுவை புறக்கணிக்க எதிர்க்கட்சி தீர்மானம் – அஜித் பி. பெரேரா எம்.பி தெரிவிப்பு

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவை (COPE) புறக்கணிக்க எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற குழுவுக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் பாரம்பரிய நடைமுறைகள் மீறப்பட்டதால் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

கோப் குழுத் தலைவர் பதவிக்கு ஒருமனதாக நியமனம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அது ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் மட்டுமே செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

தற்போதைய சூழ்நிலையில் ஏனைய பாராளுமன்றக் குழுக்களில் பங்கேற்க போவதில்லை என்ற நிலைப்பாட்டில் எதிர்க்கட்சி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்

Related posts

ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து கொள்வதற்காக இலங்கையில் இருந்து அனுப்பப்பட்ட 6 பேர் பலி!

“இலங்கைக்கு செல்ல முடியாது என தற்கொலைக்கு முயன்றவர் உயிரிழப்பு”

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு