உள்நாடுகிசு கிசு

கோட்டாவை கைது செய்யுமாறு சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் முறைப்பாடு

(UTV | கொழும்பு) – தென்னாபிரிக்காவைச் சேர்ந்த சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் (ITJP) என்ற அமைப்பு, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை போர்க் குற்றங்களுக்காகக் கைது செய்யக் கோரி சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் குற்ற முறைப்பாடு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி 2009ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற போரின் போது நாட்டின் பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது ஜெனிவா உடன்படிக்கையை மீறியதாக சுட்டிக்காட்டி இந்த அமைப்பு 63 பக்க முறைப்பாடு ஒன்றை அந்நாட்டு சட்டமா அதிபரிடம் சமர்ப்பித்துள்ளது.

சிங்கப்பூரில் உலகளாவிய அதிகார வரம்பிற்கு உட்பட்டு வழக்குத் தொடரப்படும் குற்றமாகும் என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக சிங்கப்பூரில் வழக்குத் தாக்கல் செய்ய தனது நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள போதிலும் தப்பிச் சென்றவர் என்பதை இந்த அமைப்பு காட்டுவதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச தனது இராஜினாமா கடிதத்தை ஜூலை 13 ஆம் திகதி சிங்கப்பூரில் கையளித்திருந்தார்.

Related posts

பொதுத் தேர்தல் தொடர்பில் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கான கலந்துரையாடல்

இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 47 ஆயிரத்து 866 பேர் கைது

இலங்கை மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் நிதி – ஆசிய அபிவிருத்தி வங்கி நடவடிக்கை

editor