சூடான செய்திகள் 1

கோட்டாவுக்கு எதிரான மனு; இறுதித் தீர்ப்பு நாளை

 (UTVNEWS | COLOMBO) – ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் இரட்டை குடியுரிமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பான முழுமையான தீர்ப்பு நாளை வெளிவரவுள்ளது.

மனுவை தள்ளுபடி செய்வதற்கான காரணங்கள் அடங்கிய இறுதித் தீர்ப்பை குறித்த மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி யசந்த கோதாகொட, அர்ஜூன ஒபேசேகர, மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் நாளை வழங்கவுள்ளார்.

கடந்த 2005 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கத்தில் அமைச்சரவை செயற்படாதபோது இந்த சான்றிதழ் வழங்கப்பட்டதாக மனுதாரர்கள் வாதிட்டனர், அத்தோடு அந்த காலகட்டத்தில் குடியுரிமை விடயங்களை அந்த நேரத்தில் பாதுகாப்பு அமைச்சு கையாண்டிருந்தது.

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் இரட்டைப் பிரஜாவுரிமையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர மற்றும் காமினி வியங்கொட ஆகியோர் தாக்கல் செய்த மனு கடந்த விசாரணையின்போது நிராகரிக்கப்பட்டது.

Related posts

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

சீனாவிடம் இருந்து கடனை பெற்றுக்கொள்ள அமைச்சரவையில்அனுமதி

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி விமானத்தில் நடந்த விசித்திரம்