உள்நாடு

கோட்டாவின் வெளிநாட்டு சுற்றுப்பயண செலவுகள் பற்றிய விளக்கம்

(UTV | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடுகளில் மேற்கொள்ளும் எந்தவொரு செலவுக்கும் அரசாங்கப் பணம் செலவிடப்பட மாட்டாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான அனைத்து செலவுகளும் முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட பணத்தில் மேற்கொள்ளப்படும் என அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டு செலவுகள் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

முன்னாள் மற்றும் தற்போதைய ஜனாதிபதிகளுக்கு சட்டரீதியாக சில சலுகைகள் உண்டு என ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்த போது, ​​முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டு செலவுகளுக்கு அரசாங்கம் பணம் செலவிடுவதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டதாக அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, தனது வெளிநாட்டு செலவுகள் தொடர்பில் சில ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் தவறானவை என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அந்தச் செலவுகள் அனைத்தும் அவரது தனிப்பட்ட பணத்திற்கே செலவிடப்படும் என்றும் திரு.கோத்தபாய ராஜபக்ஷ வலியுறுத்தினார் என்றும் இது தொடர்பான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

மனோ கணேசன் எம்.பியை சந்தித்த அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்

editor

சாணக்கியன் எம்.பியின் அலுவலகத்தில் முற்றுகை-100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பண மோசடியால் தஞ்சம்.

மருமகனால் தாக்கப்பட்டு மாமனார் உயிரிழப்பு – சாய்ந்தமருதில் சோகம்