உள்நாடு

‘கோட்டாபய விரைவில் நாடு திரும்புவார்’ – சாகர

(UTV | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சாகர காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் அவருக்கு பொருத்தமான வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் அதற்கான ஏற்பாடுகள் இதுவரையில் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;

“அவர் இலங்கையை விட்டு வெளியேறிய போது இருந்த நிலைமையை நாம் அனைவரும் அறிவோம். அவர் இலங்கையை ஒரு அழகிய சூழலில் விட்டுச் செல்லவில்லை. அவர் திரும்பி வந்தால் முன்னாள் ஜனாதிபதிக்கு ஏற்ற பாதுகாப்பு மற்றும் வசதிகள் வழங்கப்பட வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் இப்போது செய்யப்பட்டுள்ளன என்று நினைக்கிறேன். அவர் மிக விரைவில் இலங்கைக்கு வருவார்..” என நம்புகிறோம்.

Related posts

பாராளுமன்ற நடவடிக்கைகள் செவ்வாய் வரை ஒத்திவைப்பு

சலுகை விலையில் சிவப்பு பச்சையரிசி

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 981 ஆக அதிகரிப்பு