உள்நாடு

கோட்டாபய – அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் கலந்துரையாடல்

(UTV | கொழும்பு)) – அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் T. எஸ்பர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடியுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று(30) இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இதன்போது இலங்கையில் கொரோனா ரைவஸ் தொற்றை கட்டுப்படுத்தியமைக்கு அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் கோட்டாபயவுக்கு தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

அத்துடன் அண்மையில் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்றமைக்கு பாராட்டை தெரிவித்த அவர், இலங்கையில் மனித உரிமைகள் காப்பு மற்றும் நல்லிணக்க விடயங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Related posts

கொழும்பில் அதிகளவானவான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 122 ஆக அதிகரிப்பு

ரோஸி யாழ். விஜயம்