சூடான செய்திகள் 1

கோட்டாபயவின் மீளாய்வு மனு மீதான விசாரணை இன்று

(UTV|COLOMBO)-எவன்காட் தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்றைய தினமும் இடம்பெறவுள்ளன.

எவன்காட் வழக்கின் தாம் உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுதலை செய்யுமாறு கோரி பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த மீளாய்வு மனு நேற்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த வழக்கு விசாரணை தொடர்பான மீளாய்வு மனுவினை விசாரணை செய்வதில் இருந்து தாம் விலகிக்கொள்வதாக நீதியரசர் ஜனத் டீ சில்வா தெரிவித்ததை தொடர்ந்து அதனை பரிசீலனை செய்வதற்கே இன்றைய தினம் வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் போது , காலி துறைமுகத்தின் எவன்காட் மெரிடைம் நிறுவனத்திற்கு சொந்தமான மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையை நடத்திச் செல்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியின் மூலம் 11.4 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து கோட்டாபய ராஜபக்ஸவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

இன்று பிரதமருடன் விஷேட கலந்துரையாடல்

50 – 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசும் சாத்தியம்

அய்ஸ் என்ற போதைப்பொருளுடன் ஒருவர் கைது