உள்நாடு

கொவிட் 19 : ஜப்பானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கப்பலில் இரண்டு இலங்கையர்கள்

(UTV|கொழும்பு) – ஜப்பானின் யோகோகமா துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள டயமண்ட் பிரின்ஸஸ் சொகுசு கப்பலில் இலங்கையர்கள் இரண்டு பேர் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர்கள் இருவருக்கும் கொவிட் 19 தொற்று ஏற்படவில்லை என டோக்கியோவில் உள்ள இலங்கை தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

குறித்த இருவரும் அந்த சொகுசு கப்பலின் பணிக்குழாம் உறுப்பினர்கள் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் இக் கப்பலில் உள்ளவர்கள் 14 நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பணிக்குழாம் உறுப்பினர்கள் தொடர்ந்தும் கப்பலில் தங்கியிருக்க வேண்டும் என கப்பல் நிர்வாகம் அறிவித்துள்ளமை குறிப்பிடதக்கது

Related posts

பரீட்சைகள் தொடர்பிலான அறிவித்தல்

பாடசாலை வாகன சேவை உரிமையாளர்கள் சங்கத்தின் கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சதுரவுக்கு ஆணைக்குழு அழைப்பு