உலகம்

கொவிட் 19 : உலகளவிலான ஆதிக்கம்

(UTV | ஜெனீவா) – உலகம் முழுவதும் கொவிட் – 19 (கொரோனா வைரஸ்) தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 29 இலட்சத்தைக் கடந்துள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் குணமடைந்தோர் எண்ணிக்கை இதுவரையில் 2,909,306 ஆக பதிவாகியுள்ளது.

மேலும் இதுவரை, கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6,373,523 ஆக பதிவாகியுள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 53,400 இற்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதோடு, உலகம் முழுவதும் இதுவரை 377,584 பேர் பலியாகியுள்ளனர்.

இதுவரையான கொவிட்-19 பதிவுகள்
(இலங்கை நேரப்படி மதியம் 12.30 மணி)

கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள முதல் 10 நாடுகள்
(இலங்கை நேரப்படி மதியம் 12.30 மணி)

Related posts

அமெரிக்காவில் மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயம்

சோமாலியாவில் வெள்ளப்பெருக்கினால் 40 பேர் உயிரிழப்பு!

தென் கொரிய பாப் பாடகரும் நடிகருமான மூன் பின் காலமானார்.