உள்நாடு

கொவிட் தடுப்பூசி வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுப்பு

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொவிட் தடுப்பூசி வேலைத்திட்டத்தின் கீழ், சீனாவின் சினோபாம் கொவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் நேற்று (20) 18,988 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

அதன்படி இந்த தடுப்பூசியின் முதல் டோசை இதுவரை 485,373 பேர் பெற்றுக்கொண்டுள்ளதாகத தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேவேளை நேற்று 8,738 பேருக்கு கொவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டது. இதுவரையில் 925,242 பேருக்கு இந்த தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டது.

மேலும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியின் முதலாவது டோஸ் இதுவரை 14,941 பேருக்கு வழங்கப்பட்டது.

Related posts

உரம் கப்பல் மேலும் தாமதமாகிறது

நேற்றைய தினம் 26 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

தொழிலாளர் சம்பள உயர்வு வர்த்தமானியை இடைநிறுத்தியது உயர்நீதிமன்றம்!