உள்நாடு

கொழும்பு மாவட்டத்தில் வலுக்கும் தொற்றாளர்கள்

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணித்தியாலயத்தில் அடையாளம் காணப்பட்ட 704 கொரோனா தொற்றாளர்களில் 541 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

குறித்த தொற்றாளர்கள் அனைவரும் நோயாளர்களுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய திவுலபிட்டி பேலியகொடை ஆகிய இரண்டு கொத்தணிகளில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 13,788 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 17,287 ஆக அதிகரித்துள்ளது.

வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெறுபவர்களின் எண்ணிக்கை 5,734 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அவசர சிகிச்சைக்காக 48 மணி நேரத்தில் வைத்திய முகாம்[PHOTO]

முஸ்லிம் காங்கிரசின் மனு திங்கள் விசாரணைக்கு!

V8 ரக சூப்பர் காரை வழங்கவும் – அமைச்சர் சீதா மீண்டும் புலம்பல்