கிசு கிசு

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அதிகரிக்கும் கொரோனா

(UTV | கொழும்பு) – கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதென குறித்த வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த தாதி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றுபவர் என்பதுடன், இவருக்கு தொற்று ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பணிப்பாளர் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் இந்த தாதியுடன் இணைந்து சேவையாற்றும் ஏனைய தாதியர்கள் உள்ளிட்டவர்களுக்கான பிசிஆர் பரிசோதனைகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கு முன்னரும் குறித்த வைத்தியசாலையில் நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அரசாங்கத்தின் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மஹிந்தவுக்கு வழங்கப்பட வேண்டும்

ஐபிஎல் தொடருக்காக தயாராகும் வேகப்பந்து வீச்சாளர்

இலங்கைக்கு தடுப்பூசி வழங்க முட்டி மோதும் ரஷ்யா, சீனா