உள்நாடு

கொழும்பு கிராண்ட்பாஸ் சோதனையில் 61 பேர் கைது

(UTV | கொழும்பு) – கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியை​ மையமாக கொண்டு பொலிஸார் நேற்று மாலை 3 மணி முதல் இரவு 7.30 வரையிலானக் காலப் பகுதியில் விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் மேற்கொண்ட இந்த திடீர் சோதனை நடவடிக்கையில் 517 பொலிஸார் ஈடுபட்டிருந்தனர்.

ஹெரோயின் 37 கிராமும், 830 மில்லி கிராம், கஞ்சா போதைப்பொருள் 85 கிராமும் வைத்திருந்த 11 சந்தேகநபர்கள் உள்ளிட்ட 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த சோதனை நடவடிக்கையின்போது பெண் ஒருவர் உள்ளிட்ட 33 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டிருந்தப் பெண்ணிடமிருந்து 6 அலைபேசிகளையும், அவரிடமிருந்த 4 இலட்சத்து 49 ஆயிரத்து 500 ருபா​யையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Related posts

தந்தை ஜனாதிபதியானால் மகனால் ஜனாதிபதியாக முடியுமா – நாமல்.

இயலாமையில் உள்ள ரணிலும் அநுரவும் தற்பொழுது அரசியல் தேனிலவில் – சஜித்

editor

அதிகரிக்கும் டெங்கு நோய் பரவல்