உள்நாடு

கொழும்பு – கண்டி வீதியில் நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் கைது

கொழும்பிலிருந்து கண்டி நோக்கி நிர்வாண கோலத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபரொருவரை இன்று (03) காலை கடுகண்ணாவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் அஹங்கம பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு – கண்டி வீதியில் நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இந்த நபரை இடைமறித்துப் பிடிக்க கேகாலை, மாவனெல்ல முதலான பிரிவுகளைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடுமையாக முயற்சித்தும் அந்த நபரை பிடிக்க முடியாமற்போன நிலையில், கடுகண்ணாவை பொலிஸார் வீதித் தடைகளை ஏற்படுத்தி மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரை பிடித்து, கைது செய்ததாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் கடுகண்ணாவை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்

Related posts

போக்குவரத்து சேவை முகாமைத்துவ செயலணியின் கலந்துரையாடல் இன்று

இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய வரி

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2014 ஆக உயர்வு