உள்நாடு

கொழும்பு உள்ளிட்ட சில நகரங்களில் வளி மாசடைதல் அதிகரிப்பு!

(UTV | கொழும்பு) –  கொழும்பு மற்றும் சில பிரதான நகரங்களில் வளி மாசடைதல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பிரதேசங்களில் வளி மாசுபாட்டு தரக்குறியீடு 150 முதல் 200 புள்ளிகளாக காணப்படுவதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டை சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலையும் இதற்கு காரணம் என தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் வளி மாசுபாடு முகாமைத்துவ பிரிவின் தலைமை ஆய்வாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு, வளி மாசடைதல், சுவாச நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மேலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பொது மக்கள் வீடுகளிலிருந்து வௌியே செல்லும் போது முகக்கவசத்தை அணிவதன் மூலம் நச்சு வாயு பாதிப்பை தவிர்த்துக்கொள்ள முடியும்எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஊரடங்கு உத்தரவினை மீறிய 29 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

கே.சண்முகம் – பிரதமர் இடையே சந்திப்பு

ஃபைஸர் தடுப்பூசியின் முதற் தொகுதி நாட்டிற்கு