சூடான செய்திகள் 1

கொழும்பில் 24 மணி நேர நீர் வெட்டு…

(UTV|COLOMBO) கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு இன்று 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது.

இன்று (30) காலை 09.00 மணிமுதல் நாளை காலை 09.00 மணி வரை இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

மின்சார சபையின் திடீர் மின்வெட்டு மற்றும் அத்தியாவசிய திருத்தப் பணிகளுக்காக இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது.

இதற்கமைய, கொழும்பு, கோட்டை, தெஹிவளை, கல்கிஸ்ஸ, கடுவல மாநகர சபை பிரதேசம், பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகர சபை பிரதேசம், கொட்டிகாவத்தை, முல்லேரியாவ பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசம், றத்மலானை, சொய்ஸாபுர ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

 

 

 

Related posts

மூன்று பேரை பலிகொண்ட தனியார் பேரூந்தின் சாரதி பொலிசாரினால் கைது

கண்டி நகரில் கடும் வாகன நெரிசல்

மழையுடனான காலநிலை…