சூடான செய்திகள் 1

கொழும்பில் பாதுகாப்பிற்காக 1000 இராணுவத்தினர் சேவையில்…

(UTV|COLOMBO) நேற்று நாடளாவிய ரீதியில் 8 இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் கொழும்பு பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 1000 இற்கும் அதிகமான இராணுவத்தினரை ஈடுபடுத்தியுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களிலும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டிற்கு செல்பவர்கள் ஏதாவது தெரிந்து கொள்ள வேண்டுமாயின் 116 என்ற இலக்கத்திற்கு அழைத்து தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பாராளுமன்றம் நாளை(19) பகல் வரை ஒத்திவைப்பு

நசீர் அஹமட்டை கோபப்படுத்திய இடமாற்றம் என்ன? மாகாண கல்வியமைச்சின் செயலாளர் பதில்

மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும் மகனும் பலி