சூடான செய்திகள் 1

கொழும்பில் பலத்த காற்று: சாரிதிகள் மற்றும் பயணிகளுக்கு எச்சரிக்கை

(UTVNEWS | COLOMBO) – கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இன்று காலை முதல் மிகவும் பலத்த காற்று வீசி வருவதால் அவதானதுடன் இருக்குமாறு மக்களுக்கு அறுவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சாரிதிகள் மற்றும் பயணிகள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. என்றும் இல்லாதவாறு இன்று காலை முதல் கொழும்பில் பலத்த காற்று வீசி வருகின்றது. இதனால் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் பயணம் செய்பவர்கள் மிகவும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

குறிப்பாக மரக்கிளைகள் மற்றும் விளம்பர பதாதைகள் பலத்த காற்றின் காரணமாக வீதிகளில் வீழ்ந்து கிடக்கின்றது. மேலும், காற்றின் காரணமாக மோட்டார் சைக்கிளை செலுத்த முடியாமல் தள்ளிக்கொண்டு செல்வதனையும் காணமுடிந்தது.

இந்நிலையில், கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள வீதிகளில் பயணம் செய்யும் வாகன சாரதிகள் மற்றும் பயணிகள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

மதுபானத்தின் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு

கல்வி கட்டமைப்புடன் விளையாட வேண்டாம்-அமைச்சர் அகில

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பாக ஜனாதிபதி மகிழ்ச்சி