உள்நாடு

கொழும்பிலிருந்து பசறை நோக்கி பயணித்த பஸ் விபத்து – 13 பேர் காயம்

கொழும்பிலிருந்து பசறை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று சனிக்கிழமை (11) பசறை 15 ஆம் மைல்கல் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் 13 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாரதியின் கவனமின்மை காரணமாக பஸ் வீதியை விட்டு விலகிச் சென்றதால் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

Related posts

அரசாங்கத்தை பதவி விலகக் கோரி காலி முகத்திடலில் பாரிய போராட்டம்

ஐ.எஸ் விவகாரம்: பொய் அறிவிப்பு செய்த விரிவுரையாளர் கைது

புதிய 4,718 அதிபர் நியமனங்கள் :கல்வி அமைச்சர்