உள்நாடு

கொழும்பின் வீதிகளில் ஏற்படவுள்ள மாற்றம்

(UTV | கொழும்பு) – கொழும்பிலுள்ள வீதிகளில் புதுப்பிக்கப்பட்ட வீதி சமிக்ஞைகள் தானாக இயங்கச் செய்வதற்கான செயன்முறை இயங்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று முதல் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பாணந்துறை – வில்லியம் சந்தி வரையிலான பாணந்துறை மொரட்டுவ, கட்டுபெத்த மற்றும் அங்குலான சந்தி என்பவற்றிலும் பொருப்பன சந்தி பெலெக்கடே சந்தி, மெலிபன் சந்தி, டெம்ப்லஸ் வீதி, தெஹிவளை மேம்பாலம், வில்லியம் சந்தி ஆகியவற்றில் புதுப்பிக்கப்பட்ட வீதி சமிக்ஞைகள் இயங்கவுள்ளன.

கொழும்பு – ஹொரணை வீதியின் பல இடங்களிலும் கொட்டாவ – பத்தரமுல்லை வீதியிலுள்ள சமிக்ஞைகளும் இவ்வாறு நவீனமயப்படுத்தப்பட்டு இயங்கவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

 

Related posts

இன்றே UTV NEWS ALERT இனை செயற்படுத்த..

பொதுத் தேர்தல் – அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை இன்றும்

விண்கல் மழையை காண இலங்கையர்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம்!