உள்நாடுசூடான செய்திகள் 1

கொழும்பின் சில வீதிகளுக்கு பூட்டு

(UTVNEWS | COLOMBO) – சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒத்திகை நிகழ்வுகளை கருத்திற்கொண்டு சுதந்திர சதுக்கம் மற்றும் அதனை அண்மித்த வீதிகள் இன்று தற்காலிகமாக மூடப்படவுள்ளன.

72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளன.

பொது நூலக சுற்றுவட்டத்தில் இருந்து ஹோட்டன் சுற்றுவட்டம் வரையான வீதியே மூடப்படவுள்ளது.

அதேபோல் எப்.ஆர்.சேனாநாயக்க மாவத்தை, கங்னங்கர மாவத்தை சந்தி மற்றும் தர்மபால மாவத்தை சந்தி ஆகியனவே மூடப்படவுள்ளன.

அதன்படி சொய்சா சுற்றுவட்டத்தில் இருந்து கங்னங்கர மாவத்தைக்குள் பிரவேசிக்கும் வாகனங்களும் நன்தா மோட்டர்ஸ் சந்தியில் இருந்து தாமரை தடாக சுற்றுவட்டத்திற்குள் பிரவேசிக்கும் வாகனங்களும் தடைசெய்யப்படவுள்ளன.

அதேபோல் 120 ஆம் இலக்க பஸ் வீதியின் ஊடாக பயணிக்கும் வாகனங்கள் இப்பான் வெல சந்தியூடாக லிப்டன் சுற்றுவட்டத்திற்குள் பிரவேசித்து தர்மபால மாவத்தையின் ஊடாக செஞ்சிலுவை சங்க சந்தி மற்றும் நூலக சுற்றுவட்ட வீதியினூடாக பயணிக்க முடியும்.

கிலாஸ் அவுஸ் சந்தியின் ஊடாக கொழும்புக்குள் வரும் வாகனங்கள் அங்கிருந்து இடது புறம் திரும்பி பொது நூலக சுற்றுவட்டத்தின் ஊடாக தர்மபால மாவத்தை அல்லது லிப்டன் சுற்றுவட்டத்தில் திரும்பி பயணிக்க முடியும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Related posts

சொந்த சகோதரியை வன்புணர்விற்கு உட்படுத்தி வந்த ஒருவர் கைது

உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள் இன்றும் நிறைவு

தேயிலை விற்பனையில் வீழ்ச்சி