விளையாட்டு

கொல்கத்தாவை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் வெற்றி

(UTV | துபாய்) –  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 46-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ஓட்டங்கள் எடுத்தது.

அதன்பின் 150 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி களமிறங்கியது.

இறுதியில், பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 150 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மந்தீப் சிங் 56 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 66 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஸ்மித், வார்னர் மீதான தடையை நீக்க முடியாது-அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்

இந்திய , அவுஸ்திரேலியா கிரிக்கட் தொடர் இன்று

ஏஞ்சலோ மேத்யூஸ் இற்கு கொரோனா