கொலன்னாவ, மீதொட்டமுல்ல குப்பை மேட்டுக்கு அருகில் சட்டவிரோதமாக தங்கியிருந்த குழுவொன்றை வெளியேற்றுவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்தது.
நீதிமன்ற உத்தரவுப்படி அந்த இடத்தில் கட்டப்பட்ட 24 வீடுகள் இடிக்கப்பட்டன.
கொலன்னாவ, மீதொட்டமுல்ல குப்பை மேட்டுக்கு அருகில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான இந்த காணியில் மக்கள் வசித்து வருகின்றனர்.
எவ்வாறாயினும், அளுத்கடை இலக்கம் 5 நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பின் பிரகாரம், நகர அபிவிருத்தி அதிகார சபை இந்த குழுவை நீக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
இவர்களுக்கு கொலன்னாவ பிரதேசத்தில் குடியிருப்புகள் வழங்கப்பட்டதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஆனால், உரிய இடத்தை விட்டு வெளியேறாத ஒரு குழுவினருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இந்த நீதிமன்ற உத்தரவும் பெறப்பட்டது.
இதன்படி, நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் அளுத்கடை நீதிவான் நீதிமன்ற இலக்கம் 5 இன் பதிவாளர் முன்னிலையில் உரிய அகற்றல்கள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால், இங்கு செல்ல மாற்று இடம் இல்லை என அப்பகுதி மக்கள் முறைப்பாடு தெரிவிக்கின்றனர்.