உலகம்

கொரோனா முடிவுக்கு வருவதாக உலகம் கனவு காணத் தொடங்குகிறது

(UTV | ஜெனீவா) – கொரோனா தொற்று முடிவுக்கு வருவதை உலகம் கனவு காணத் தொடங்கலாம் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

கடந்த 03ம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெற்ற ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில், இணையவழியில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசி சோதனைகளின் முடிவுகள் நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளன. எனவே கொரோனா தொற்று முடிவுக்கு வருவதை உலகம் கனவு காண தொடங்கலாம்.

கொரோனா தடுப்பூசி விநியோகத்தின் போது ஏழை நாடுகளை, பணக்கார மற்றும் சக்தி வாய்ந்த நாடுகள் மிதித்து விடக்கூடாது. கொரோனா தொற்று அதன் மிகச் சிறந்த மற்றும் மிக மோசமான பக்கத்தை மனித குலத்துக்கு காட்டியுள்ளது.

இரக்கம், சுய தியாகத்தின் ஊக்கம் அளிக்கும் செயல்கள், விஞ்ஞானம் மற்றும் புதுமையின் மூச்சடைக்கக்கூடிய சாதனைகள் மற்றும் ஒற்றுமையின் இதயத்தை தூண்டும் நிகழ்வுகளையும் கூட காட்டியுள்ளது என்றார்.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

கத்தார் உலக கோப்பை தொடக்க விழாவில் மனங்களைக் கவர்ந்த இளைஞர் யார்?

விலங்குகளுக்கான உலகின் முதல் கொரோனா தடுப்பூசி

ட்ரம்ப் இனது YouTube கணக்கும் முடங்கியது