உலகம்

கொரோனா பாதிப்பு 2.20 கோடியை தாண்டியது

(UTV | ஜெனீவா) – உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 2.20 கோடியை தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 7.76 லட்சமாக உயர்ந்துள்ளது. உலக நாடுகளில் 8 மாதங்களாக கொரோனாவின் கோரத்தாண்டவம் தொடருகிறது. உலகம் முழுவதும் மொத்தம் 22,035,737 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 14,775,237 பேர் குணமடைந்தும் உள்ளனர்.

அதேநேரத்தில் 776,852 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகளில் ஒருநாள் பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 54,288 பேருக்கு கொரோனா உறுதியானது. அமெரிக்காவில் 40,211 பேருக்கும் பிரேசிலில் 23,038 பேருக்கும் ஒரேநாளில் கொரோனா தொற்று உறுதியானது.

இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,701,604 ஆக உள்ளது. கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை இந்தியாவில் 1,976,248 ஆகும். தற்போதைய நிலையில் இந்தியாவில் 673,431 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகின்றனர். அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,611,626; கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 173,710; கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 2,970,472 ஆகவும் பதிவாகியுள்ளது.

Related posts

உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 03 இலட்சத்தை கடந்தது

இம்ரான் கானுக்கு அறுவை சிகிச்சை

அமெரிக்க விமானப் பயன்பாட்டை நிறுத்திய ஜப்பான்!