உள்நாடு

நாட்டில் மேலும் 9 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,333 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி, நாட்டில் நேற்றைய தினம்(24) 09 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

கட்டாரில் இருந்து வருகை தந்த மூவருக்கும் குவைட்டில் இருந்து வந்த இருவருக்கும் ஈரானில் இருந்து வந்த இருவருக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்த ஒருவருக்கும் மற்றும் மாலைத்தீவில் இருந்து வந்த ஒருவருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3142 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், தற்போது 178 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகினறனர்.

Related posts

அரச வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்பு

லண்டனில் இலங்கையர் ஒருவர் பலி

முடிந்தளவு கொண்டாட்டங்களையும், விருந்துபசாரங்களையும் தவிர்க்கவும்