உலகம்

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 5 மில்லியனை கடந்தது

(UTV | பிரேஸில் ) – பிரேஸிலில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 5 மில்லியனை கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், பிரேசிலில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் மேலும் 31404 பேர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 5,002,357 ஆக அதிகரித்துள்ளது

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 148,304 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக கொரோனா தொற்றினால் அதிக பாதிப்புக்கள் பதிவாகியுள்ள மூன்றாவது நாடாக பிரேசில் காணப்படுகின்றது.

Related posts

ட்ரம்பின் பிரியாவிடை கோரிக்கையை பென்டகன் நிராகரிப்பு

கொவிட்-19 : சிங்கப்பூரில் தொற்றுக்கு உள்ளான 77 பேர் அடையாளம்

தமிழகத்தில் நிலநடுக்கம்!