உலகம்

கொரோனா தொற்று : 83 இலட்சத்தை நெருங்குகிறது

(UTV | கொவிட் -19) – உலகம் முழுவதும் கொவிட் -19 எனும் இனங்காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை இதுவரையில் 4 இலட்சத்து 45 ஆயிரத்து 986 ஆக பதிவாகியுள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருவதோடு, இந்த வைரசுக்கு இதுவரையில் தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

மருந்துகளை கண்டுபிடிக்க முயற்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் இதுவரையில்:

வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளோர் எண்ணிக்கை : 8,257,885
வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை : 445,986
வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை : 4,306,749

Related posts

இந்தோனேஷியா சிறை விபத்தில் 40ஐ தாண்டிய பலிகள்

முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நாடு

அமெரிக்காவில் நினைவுநாள் கொண்டாடத்தில் துப்பாக்கிச்சூடு; 9 பேர் பலி