உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2674 ஆக உயர்வு

(UTV| கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2674 ஆக அதிகரித்துள்ளது

இதன்படி, நேற்றைய தினம்(14) 9 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கட்டாரில் இருந்து நாடு திரும்பிய 4 பேருக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடுதிரும்பிய 4 பேருக்கும், கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துடன் தொடர்பை பேணிய குண்டசாலை தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதற்கமைய நாட்டில கொரோனா வைரஸ் தொற்றிலிருந்;து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2 001 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது 663 பேர் நாட்டில் உள்ள வைத்தியாசலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

ஸ்ரீலங்கன் விமான சேவை; விசேட விமானம் ஒன்று சிங்கப்பூருக்கு

தனியார் பேருந்துகள் பணிப்புறக்கணிப்பில்…

பாடசாலையில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது