விளையாட்டு

கொரோனா காரணமாக கிரிக்கெட்டில் ‘எச்சில்’ பயன்படுத்த தடை

(UTV – கொழும்பு) – உலகளவில் அச்சுறுத்தல் மிக்க வைரஸ் தொற்றுள்ள தற்போதைய சூழ்நிலையில் ‘எச்சில்’ பயன்படுத்தினால் மற்ற வீரர்களுக்கு அதன்மூலம் நோய் பரவும் அபாயம் உள்ளதால், பயன்படுத்த ஐசிசி தடைவிதிக்க பரிந்துரை செய்துள்ளது.

‘எச்சில்’ பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டால் அது பந்து வீச்சாளர்களுக்கு கடினமான விஷயம் என்று கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் ஒரு தொற்று நோய் என்பதால் ஒவ்வொருவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியது கட்டாயத்தில் உள்ளோம். கிரிக்கெட் விளையாட்டின்போது பந்தை பளபளப்பாக்க பந்து வீச்சாளர்கள் எச்சில் மற்றும் வியர்வையை பயன்படுத்துவர்

இது குறித்து கவுதம் கம்பிர் கூறுகையில் ‘‘எச்சில் பயன்படுத்த தடைவிதிப்பது பந்து வீச்சாளர்களுக்கு கடுமையான விடயம். ஐசிசி அதற்கான மாற்று முறையை கொண்டு வர இருக்கிறது. பந்தை பளபளப்பாக்க முடியவில்லை என்றால், பந்துக்கும் பேட்டிற்கும் இடையில் சரியான போட்டியாக இருக்கும் என நான் நினைக்கவில்லை.

நீங்கள் ‘எச்சில்’ பயன்படுத்த அனுமிக்கவில்லை என்றால், மாற்று ஏற்பாட்டை செய்ய வேண்டும். இது மிகவும் முக்கியமானதாக இருக்கும், இல்லையெனில் கிரிக்கெட்டைப் பார்ப்பது வேடிக்கையாக இருக்காது’’ என்றார்.

Related posts

பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் 100 வது டெஸ்ட் போட்டி இலங்கையுடன்

இருபதுக்கு 20 உலக கிண்ணம் : வெள்ளியன்று தீர்மானம்

இம்முறை ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில்