உள்நாடு

கொரோனாவிலிருந்து மேலும் 9 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 9 பேர் பூரணமாக குணமடைந்து இன்று(10) வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,955 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், தற்போது 180 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் இதுவரை 3147 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

“Clean Sri Lanka” தொடர்பில் வௌியான வர்த்தமானி அறிவித்தல்

editor

வீட்டிலிருந்தே வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளும் வசதி – கனக ஹேரத்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி