கேளிக்கை

கொரோனாவிலிருந்து குணமடைந்தார் ஐஸ்வர்யா ராய்

(UTV|இந்தியா) – கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் சிகிச்சைக்கு பின் குணமடைந்து தற்போது வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர்ளான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர்கள் மும்பையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து, அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டதில் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கு கொரோனா இல்லை எனவும் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது ஆரத்யாவுக்கும் கொரோனா இருப்பது உறுதியானது.

இந்நிலையில், ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆரத்யாவுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என முடிவு வந்துள்ளதாகவும், இதையடுத்து இருவரும் வீடு திரும்பியுள்ளதாக அமிஷேக் பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், தனக்கும், தந்தை அமிதாப் பச்சனும் இன்னும் கொரோனாவில் இருந்து குணமடையாததால் தொடர்ந்து மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்றுவருவதாகவும், குடும்பத்தினர் கொரோனாவில் இருந்து குணமடைய தொடர்ந்து பிரார்த்தனை செய்துவரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் அபிஷேக் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related posts

எம்மவர்களின் படைப்பில் “நீ நிகழ்வதுவா”

படப்பிடிப்பில் நடிகை அலியாபட் காயம்

பிரபல நடிகருக்கு நள்ளிரவில் நடந்த நிச்சயதார்த்தம்