வகைப்படுத்தப்படாத

கைதிகளை சித்திரவதைக்கு உட்படுத்த கூடாது – பூஜித்

(UDHAYAM, COLOMBO) – காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் எந்தவொரு கைதியும் தாக்குதல் மற்றும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படக் கூடாதென காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிளுக்கான விசேட கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.

காவல்துறையின் ஏதேனும் ஒரு அதிகாரி தனது கடமைகளில் அத்தகைய அநீதிகளை இழைக்க முற்பட்டிருப்பின், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க பின்நிற்கப் போவதில்லை என காவல்துறைமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தென்னாபிரிக்கா பாரிய வெள்ளத்தில் சிக்கி 60 பேர் உயிரிழப்பு

மலையகத்தில் கடும் காற்று

பாகிஸ்தான் vs பங்களாதேஷ்; பங்களாதேஷ் அணி அறிவிப்பு