சூடான செய்திகள் 1

கைக்குழந்தை சடலமாக மீட்பு

(UTV|COLOMBO)-பியகம, வல்கம, மல்வானா பகுதியில் இருந்து குழந்தை ஒன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் ஆறு மாதமான குழந்தையின் சடலமே இவ்வாறு பியகம பொலிஸாரால் வீடு ஒன்றின் குப்பை மேட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

குழந்தையின் சடலம் நீதவான் பரிசோதனையின் பின் அதே இடத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

குறித்த குழந்தையின் உறவினர்கள் குறித்து இதுவரை எதுவித தகவல்களும் தெரிய வராத நிலையில், பியகம பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

Related posts

உடவளவை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு…

பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை உள்வாங்கும் பணி ஆரம்பம்

2018 -வாக்காளர் பெயர்ப்பட்டியலே 2020 ஜனாதிபதித் தேர்தலுக்காக பயன்படுத்தப்படும்